நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கண்காணிக்க தாலுகா அளவில் குழு அமைப்பு

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கண்காணிக்க தாலுகா அளவில் குழு அமைப்பு
x
தினத்தந்தி 2 Feb 2022 11:38 PM IST (Updated: 2 Feb 2022 11:38 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை கண்காணிக்க தாலுகா அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை கண்காணிக்க தாலுகா அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு சம்பா (2021-22) பருவத்தில் விவசாயிகள் நலன் கருதி முதற்கட்டமாக 54 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். தற்போது 47 கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. 

இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  இணையவழி பதிவின்படி பதிவு செய்த விவசாயிகளுக்கு முன்னுரிமை பிறழாமல் நெல் கொள்முதல் செய்யப்படுவதையும், சரியான விலைக்கு பெறப்படுவது, உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு உரிய தொகை வழங்கப்படுவது, அரசு நிர்ணயித்த தொகையை தவிர எவ்விதமான தொகையும் தனியாக பெறக் கூடாது என்பதை கண்காணிக்கும் வகையில் தாலுகா அளவில் அந்தந்த பகுதி தாசில்தார் தலைமையில் கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Next Story