தஞ்சை பள்ளி மாணவி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு


தஞ்சை பள்ளி மாணவி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு
x
தினத்தந்தி 3 Feb 2022 5:48 PM IST (Updated: 3 Feb 2022 5:48 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை பள்ளி மாணவி வழக்கை சிபிஐக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுப்ரீம் கோர்ட்டி தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

சென்னை,

தஞ்சை பள்ளி மாணவியின் தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி, ஐகோர்ட்டு மதுரைக் கிளை உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து, யாரேனும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தால், அதில் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என மாணவியின் தந்தை தரப்பில், சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில்  தஞ்சை பள்ளி மாணவி வழக்கை சிபிஐக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதில்,  ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு தவறானது, இடைக்கால தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது  என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story