நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - பிப்.11 வரை பேரணிக்கு தடை
நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் பேரணியாக சென்று வாக்கு சேகரிக்க பிப்ரவரி 11-ம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களை கட்ட துவங்கி உள்ளது.
நாளை 4 ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதனால் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சையாக களம் காணுவோர் வேட்பு மனுவை தாக்கல் செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதனிடையே மாநில தேர்தல் ஆணையம் கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அரசியல் கட்சிகள் மற்றும் களம் காணும் வேட்பாளர்களை கேட்டுக்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பாதயாத்திரை, பேரணி மற்றும் சைக்கிள் பேரணி போன்றவற்றிற்கு வரும் 11-ம் தேதி வரை நடத்த கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் உள் அரங்கில் கூட்டம் நடத்த இருப்பவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story