பாகூர் தாலுகா அலுவலகத்தை பெண்கள் முற்றுகை


பாகூர் தாலுகா அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 3 Feb 2022 11:35 PM IST (Updated: 3 Feb 2022 11:35 PM IST)
t-max-icont-min-icon

மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக மதுக் கடைகளை அகற்றக்கோரி பாகூர் தாலுகா அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக    மதுக் கடைகளை அகற்றக்கோரி பாகூர் தாலுகா அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
மூதாட்டி பலாத்காரம்
பாகூர் அடுத்த சோரியாங்குப்பம்  தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் கடந்த 29-ந் தேதி தனியாக வயலில் வேலை செய்த 63 வயது மூதாட்டியை தாக்கி, வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் காயமடைந்த மூதாட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை பலாத்காரம் செய்த வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
சோரியாங்குப்பத்தில் உள்ள   மது,  சாராய கடை களுக்கு    வரும்  மதுபிரியர் களால் அப்பகுதி பெண்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் நடந்து வருவதாகவும், பல இளைஞர்கள் வழிதவறி குடிப்பழக்கத்திற்கு ஆளாவதாகவும், இதற்கு காரணமான மதுக்கடைகளை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட  நாட் களாக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
தாலுகா அலுவலகம் முற்றுகை
இந்தநிலையில்     இன்று 100-க்கும் மேற்பட்ட கிராமப்புற பெண்கள் பாகூர் தாலுகா அலுவலகம் முன் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது      பாலியல் வன்முறைக்குள்ளாக்கியவரை உடனே கைது செய்ய வேண்டும். மூதாட்டிக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். எல்லைகளில் விவசாய நிலம் அருகே உள்ள மதுக்கடைகளை உடனே அகற்ற வேண்டும் என்று கோஷமிட்டனர். கோரிக்கைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் கைகளில் ஏந்தி இருந்தனர்.
இந்த போராட்டத்தில் சோரியாங்குப்பம் கலியமூர்த்தி தலைமையில் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இது சம்பந்தமான கோரிக்கை மனுவும் பாகூர் தாலுகா அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது.
பெண்களின்  முற்றுகை போராட்டத்தால்  அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Next Story