பெண்ணுக்கு ஆபாசபடம் அனுப்பிய வாலிபர் கைது
பெண்ணுக்கு ஆபாசபடம் அனுப்பி தொந்தரவு செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த தேனி கிராமத்தை சேர்ந்தவர் பழனிகுமார் (வயது 39). இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பாரதிய சனாதள இயக்கத்தில் மாநில செயலாளராக இருந்தார்.
இவருக்கும் திருப்பூர் திருமுருகன்பூண்டியை சேர்ந்த 35 வயது பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்போது பழனிகுமார் அந்த பெண்ணிடம் தனக்கும் தனது மனைவிக்கும் விவாகரத்து ஏற்பட்டு விட்டது என்றும், எனவே நாம் கணவன் மனைவியாக சேர்ந்து வாழலாம் என்று கூறி அந்த பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார்.
ஆனால் பழனிகுமாரின் அவருடைய மனைவியை விவாகரத்து செய்யவில்லை என்பது அந்த பெண்ணுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அந்த பெண் பழனிகுமாரை விட்டு விலக ஆரம்பித்தார்.
ஆனால் பழனிகுமார் அவரை விடாமல் தொந்தரவு செய்ததுடன் செல்போனுக்கு ஆபாச படங்களையும் அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் தன்னுடன் சேர்ந்து வாழவேண்டும் என்று பழனிகுமார் கொலைமிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.
இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து பழனிகுமாரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story