நெல்லை பள்ளி வழக்கு- தாளாளர், தலைமை ஆசிரியர் விடுவிப்பு


நெல்லை பள்ளி வழக்கு- தாளாளர், தலைமை ஆசிரியர் விடுவிப்பு
x
தினத்தந்தி 4 Feb 2022 12:19 PM IST (Updated: 4 Feb 2022 12:19 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான வழக்கில் பள்ளியின் தாளாளர் உட்பட 2 பேர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுவதாக ஐகோர்ட்டு மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

மதுரை,

நெல்லையில் உள்ள தனியர்மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி கழிப்பறை கட்டடச் சுவா்  இடிந்து விழுந்ததில் 3 மாணவா்கள் பலியாகினர். மேலும், 4 மாணவா்கள் காயமடைந்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக பள்ளித் தாளாளா் செல்வகுமாா், தலைமையாசிரியா் எஸ்.பி. பொசிஸ் ஞானசெல்வி, கட்டுமான ஒப்பந்ததாரா் ஜான்கென்னடி ஆகியோா் மீது திருநெல்வேலி சந்திப்பு காவல்துறையினர் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தனா்.

இந்நிலையில் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி தாளாளா் செல்வகுமாா், தலைமையாசிரியா் எஸ்.பி. பொசிஸ் ஞானசெல்வி ஆகியோர் ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் விசாரணையில், தாளாளர், தலைமை ஆசிரியை மீதான வழக்குகளை ரத்து செய்து ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளியின் தாளாளர், தலைமை ஆசிரியை ஆகிய இருவரும் இந்த சம்பவம் நிகழ்வதற்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே பொறுப்பேற்றுள்ளதால் அவர்கள் விபத்துக்கு பொறுப்பேற்க முடியாது என்று கூறி அவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்பட்டுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 

Next Story