பப்ஜி மதனுக்கு சிறையில் வசதிகள் செய்து தர லஞ்சம் கேட்ட சிறை அதிகாரிகள்


பப்ஜி மதனுக்கு சிறையில் வசதிகள் செய்து தர லஞ்சம் கேட்ட சிறை அதிகாரிகள்
x
தினத்தந்தி 4 Feb 2022 12:24 PM IST (Updated: 4 Feb 2022 12:24 PM IST)
t-max-icont-min-icon

பப்ஜி மதனுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அவரது மனைவி கிருத்திகாவிடம் சிறைத்துறை அதிகாரி லஞ்சம் கேட்பது போன்ற பரபரப்பு ஆடியோ வெளியானது.

சென்னை: 

யூடியூப் சேனல்களை தொடங்கி அதன்மூலம் பிரபலமானவர் மதன். இவர் மதன், மதன் 18+, பப்ஜி மதன் உள்பட பல்வேறு சேனல்களை நடத்தி வந்தார்.
 
இந்த யூடியூப் சேனல்கள் மூலமாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் அதிகளவில் மனதளவில் பாதிக்கப்படுவதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. 

இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பப்ஜி மதன் மீது வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், பப்ஜி மதனுக்கு சிறையில் சகல வசதிகளை செய்து கொடுக்க, அவரது மனைவி கிருத்திகாவிடம் சிறைத்துறை அதிகாரி லஞ்சம் கேட்பது போன்ற பரபரப்பு ஆடியோ வெளியானது

முதல்கட்டமாக கூகுள் பே மூலமாக 25 ஆயிரம் ரூபாய் அனுப்பிய தகவலும் வெளியாகி உள்ளது குறித்து விசாரணை நடத்தப்படும் என சிறைத்துறை டிஜிபி தெரிவித்துள்ளார்.


Next Story