கணவனை கொன்ற வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது
பெட்ரோல் குண்டு வீசி கணவனை கொன்ற வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர்.
ஆரணி
ஆரணி அடுத்த மருசூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த சுந்தரமூர்த்திக்கும் அவரது மனைவி செந்தாமரைக்கும் அதிக வயது வித்தியாசத்துடன் திருமணம் நடைபெற்றது. ஏற்கனவே செந்தாமரையின் அக்காவுடன் சுந்தரமூர்த்திக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் வேறு ஒரு நபருடன் காதல் திருமணம் செய்து கொண்டதால் செந்தாமரையை திடீர் என சுந்தரமூர்த்திக்கு திருமணம் செய்து வைத்தனர்.
சுந்தரமூர்த்தியுடன் விருப்பமில்லாமல் வாழ்ந்த செந்தாமரை அதே கிராமத்தைச் சேர்ந்த தருமன் மகன் மதியழகனுடன் கள்ள உறவில் ஈடுபட்டுள்ளார். இதற்க்கு இடையூறாக இருந்த சுந்தரமூர்த்தியை கடந்த 2009ஆம் ஆண்டு கள்ளக்காதலன் மதியழகனுடன் இணைந்து பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்தார்.
இந்த வழக்கு சம்பந்தமாக ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தியதில் சுந்தரமூர்த்தியை அவரது மனைவி செந்தாமரை தான் பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்தார் என்பது உறுதியானது . அவருக்கு உடந்தையாக இருந்த கள்ளக்காதலன் மதியழகனையும் செந்தாமரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இவ்வழக்கு ஆரணி நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில் 10 ஆண்டுகாலமாக விசாரணைக்கு ஆஜராகாததால் இருவரையும் பிடிவாரன்ட் பிறப்பித்து கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளிக்கரணை அருகே பதுங்கியிருந்தவர்களை ஆரணி தாலுகா போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Related Tags :
Next Story