தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது


தமிழகத்தில்  தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது
x
தினத்தந்தி 4 Feb 2022 7:38 PM IST (Updated: 4 Feb 2022 7:38 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை உச்சம் பெற்று தற்போது குறையத்தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே தொற்று பாதிப்பு சீரான வேகத்தில் குறைந்து வருகிறது. அந்த வகையில், இன்று தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. 

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு: -  தமிழகத்தில் மேலும் 9,916- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 33 லட்சத்து 97 ஆயிரத்து 238-  ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து  ஒரே நாளில் 21 ஆயிரத்து 435- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புக்கு  ஒரே நாளில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 356- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தில் அதிகபட்சமாக சென்னையில் 1,475- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 


Next Story