நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்ப கவர்னருக்கு அதிகாரம் உள்ளது தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்ப கவர்னருக்கு அதிகாரம் உள்ளது என்று புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
புதுச்சேரி
நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்ப கவர்னருக்கு அதிகாரம் உள்ளது என்று புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
செடல்விழா
புதுவை கதிர்காமம் முத்துமாரியம்மன் கோவில் செடல் விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தராஜன் கலந்து கொண்டார். அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமியும் உடனிருந்தார்.
சாமி தரிசனம் செய்த பின் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. பிற மாநிலங்களை ஒப்பிடும்போதும் பாதிப்பு மிகவும் குறைந்துள்ளது. தொற்று குறைந்து திருவிழாக்களுக்கு அனுமதி அளித்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு மசோதாவை திருப்பி அனுப்ப கவர்னருக்கு முழு அதிகாரம் உள்ளது. இதில் சில கருத்துகளை கவர்னர் கூறியுள்ளார். அரசியல் அமைப்பு சட்டத்தில் எந்த மசோதாவாக இருந்தாலும் திருப்பி அனுப்ப கவர்னருக்கு அதிகாரம் உள்ளது.
திறமைசாலிகள்
கவர்னர்கள் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எதிராக இருப்பார்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். ஆனால் அனைத்து கவர்னர்களும் திறமைசாலிகள். அவர்கள் ஒரு பிரச்சினையை எப்படி அணுகவேண்டும் என்று தெரிந்தவர்கள்.
மக்களுக்கு நல்லது இல்லை என்றால், ஒரு மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பலாம். எனவே அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக தமிழக கவர்னர் நடந்ததாக கூறுவது சரியாகாது.
இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
Related Tags :
Next Story