ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை பெற்ற மருத்துவர்


ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை பெற்ற மருத்துவர்
x
தினத்தந்தி 5 Feb 2022 11:54 AM IST (Updated: 5 Feb 2022 12:26 PM IST)
t-max-icont-min-icon

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் மருத்துவர் ஒருவர் அதே மருத்துவமனையில் குழந்தை பெற்றது வியப்பை ஏற்படுத்தி உள்ளார்

கன்னியாகுமரி

குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெரி. இவருடைய மனைவி தொனி (வயது 29). இவர் இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

கர்ப்பிணியான தொனி மாதாந்திர பரிசோதனையை, பணிபுரிந்த மருத்துவமனையிலேயே மற்றொரு டாக்டரிடம் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் டாக்டர் தொனிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவரை இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு சுக பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இது அவருக்கு 2-வது குழந்தையாகும். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அங்கு பணிபுரிந்த டாக்டரே குழந்தை பெற்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.




Next Story