கண்டெய்னர் லாரி திருட்டு - 2 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசார்


கண்டெய்னர் லாரி திருட்டு - 2 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசார்
x
தினத்தந்தி 5 Feb 2022 11:54 AM IST (Updated: 5 Feb 2022 11:54 AM IST)
t-max-icont-min-icon

கண்டெய்னர் லாரி திருடப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியை 2 மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்

வேலூர்

ஓச்சேரி அருகே உத்திரம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் பெங்களூரில் உள்ள தனியார் லாரி கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து லோடு ஏற்றி கொண்டு சென்றுள்ளார். அப்போது லாரியை ஓச்சேரியில் சாலை ஓரமாக நிறுத்திவிட்டு தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.  பின்னர்  திரும்பி வந்து பார்த்த போது லாரியை காணவில்லை.

அதிர்ச்சியடைந்த அவர்  சாலையின்  இருபுறமும் தேடி பார்த்துள்ளார்.  இது தொடர்பாக அவளூர் போலீஸ் நிலையத்தல் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து  டோல்கேட்டுக்கும்  போலீசார் தகவல் அனுப்பி வைத்தனர்

 பின்னர் போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில் சுங்குவார் சத்திரம் அருகே லாரி நிற்பதாக தகவல் வந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் லாரியை திருடிய நபரை கைது செய்து லாரியை மீட்டனர். பின்னர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story