சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் அதிமுக பங்கேற்குமா? எதிர்பார்க்கிறோம்... அமைச்சர் மா.சுப்பிரமணியன்


சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் அதிமுக பங்கேற்குமா? எதிர்பார்க்கிறோம்... அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 5 Feb 2022 12:37 PM IST (Updated: 5 Feb 2022 12:40 PM IST)
t-max-icont-min-icon

சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் அதிமுகவும் பங்கேற்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை,

நீட் விலக்கு தொடர்பாக நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டம் நிறைவுக்கு பின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- 

சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வரும் 8ம் தேதி சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறும்.  சட்டமன்ற கூட்டத்தில் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி மீண்டும் கவர்னருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் அதிமுகவும் பங்கேற்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

மேலும்,  நீட் விலக்குக்காக நிறைவேற்றிய மசோதா ஒட்டுமொத்த மக்களுக்கும் புரிந்துள்ளது. கவர்னருக்கும் அண்ணாமலைக்கு மட்டுமே புரியாமல் போனது விந்தையாக இருக்கிறது என கூறினார்.

Next Story