மதுரை,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- "அதிமுகவைப் பொறுத்தவரையில், நீட் தேர்வை நேற்றும் நாங்கள் எதிர்த்தோம், இன்றும் எதிர்த்துக் கொண்டிருக்கின்றோம், நாளையும் எதிர்ப்போம். நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வரை, அதிமுக உறுதியாக எதிர்க்கும். தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கியிருக்கிறது.இந்த நீட் தேர்வை திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் மத்திய கூட்டாட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. அதனால் இவ்வளவு பெரிய விளைவுகள் ஏற்பட்டுள்ளது. எனவே, இதற்கு முழு முதற் காரணமாக இருந்தவர்கள் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அரசியலமைப்பின்படி, ஓர் கவர்னராக ஆற்ற வேண்டிய பணியை தமிழக ஆளுநர் செய்து கொண்டிருக்கிறார்' என்றார்நீட் விவகாரத்தில் அதிமுக - பாஜகவின் நாடகத்திற்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்; மீண்டும் மீண்டும் பொய்யை சொல்லி மக்களை ஏமாற்ற நினைக்கும் ஓபிஎஸ்-ன் செயல் கண்டனத்திற்குரியது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியது குறிப்பிடத்தக்கது.