சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது


சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 5 Feb 2022 3:48 PM IST (Updated: 5 Feb 2022 3:48 PM IST)
t-max-icont-min-icon

வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

விருதுநகர்,

விருதுநகர் அருகே குல்லூர் சந்தையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் பெற்றோருடன் வசிக்கும் 16-வயது மாணவி அங்குள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்நிலையில் முகாமின் அருகிலுள்ள பாலவனத்தம் தெற்குப் பட்டியை சேர்ந்த அச்சப்பன் (22) என்பவர் அகதிகள் முகாமில் உள்ள மைதானத்தில் மாணவியை அழைத்து பேசி ஆசை வார்த்தை கூறி மாணவி வீட்டில் தனியாக இருக்கும் போது பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. 

இது பற்றி மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் அச்சப்பன் மீது போக்சோ சட்டதில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.


Next Story