புதுப்பெண் தூக்கு மாட்டி தற்கொலை
திருமணமான மூன்று மாதத்தில் இளம்பெண் தனது வீட்டிலே துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே வளவனூர், சின்னப் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட வேலை பார்த்து வரும் பாலா(28) என்பவருக்கு திருவெண்ணை நல்லுரை சேர்ந்த திவ்யா (21) உடன் மூன்று மாதத்திற்க்கு முன்பு திருமணம் ஆனது. திருமணத்திற்கு முன் திவ்யா தனது சித்தப்பா மகன் விக்கி என்கிற விக்னேஸ்வரன் (20) என்பவருடன் அடிக்கடி பேசி பழக்கம் இருந்து வந்துள்ளது. இது குறித்து பாலா தன் மனைவியை கிண்டல் கேலியாக குத்திக் காட்டி வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த திவ்யா அவரது கணவர் வீட்டிலேயே துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த திவ்யாவின் தந்தை முனியன் வளவனூர் போலீசில் நடவடிக்கை எடுக்குமாறு புகார் செய்துள்ளார்.
Related Tags :
Next Story