சனிக்கிழமையையொட்டி திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்


சனிக்கிழமையையொட்டி திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில்    குவிந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 5 Feb 2022 7:49 PM IST (Updated: 5 Feb 2022 7:49 PM IST)
t-max-icont-min-icon

சனிக்கிழமையையொட்டி திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

காரைக்கால்
சனிக்கிழமையையொட்டி திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

சனீஸ்வரர் கோவில்

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சனிக்கிழமையின் போது ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனி பெயர்ச்சியின்போது லட்சக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்வார்கள்.  இந்தநிலையில் நேற்று சனிக்கிழமை என்பதால் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர். குறிப்பாக தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். 

சமூக இடைவெளி

கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். 
சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பக்தர்கள் முண்டியடித்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கிடையே பக்தர்களின் வசதிக்காக புதுச்சேரி, சென்னை, திருச்சி, கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு போதுமான பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

Next Story