காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில் ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் போராட்டம்
ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி
ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்வுகள்
புதுச்சேரி லாஸ்பேட்டையில் காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம் உள்ளது. இங்கு சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பட்ட மேற்படிப்பு படித்து வருகின்றனர்.
கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து நேற்று முதல் கல்லூரி திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறுகிறது. இந்தநிலையில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் தேர்வுகள் நேரடியாக நடைபெறும் என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்தது.
வகுப்பு புறக்கணிப்பு
இதற்கு மாணவ, மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்வுகளை கடந்த காலங்களைப்போல் ஆன்லைன் மூலமே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் பட்டமேற்படிப்பு மைய இயக்குனர் செல்வராஜை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். ஆன்லைனில் தேர்வு நடத்தவும் அறிவுறுத்தினார். அதன்படி ஆன்லைன் தேர்வு நடத்துவதாக இயக்குனரும் மாணவர்களிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மாணவ, மாணவிகள் மீண்டும் வகுப்புக்கு திரும்பினர்.
Related Tags :
Next Story