எம் எல் ஏ வுக்கு அழைப்பு விடுக்காததால் கிராம வளர்ச்சி கூட்டத்தை புறக்கணித்த மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் பரபரப்பு


எம் எல் ஏ வுக்கு அழைப்பு விடுக்காததால்  கிராம வளர்ச்சி கூட்டத்தை புறக்கணித்த மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் பரபரப்பு
x
தினத்தந்தி 5 Feb 2022 8:16 PM IST (Updated: 5 Feb 2022 8:16 PM IST)
t-max-icont-min-icon

எம்.எல்.ஏ.வுக்கு அழைப்பு விடுக்காததால் கிராம வளர்ச்சி கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாகூர்
எம்.எல்.ஏ.வுக்கு அழைப்பு விடுக்காததால் கிராம வளர்ச்சி கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முன்மாதிரி கிராமம்

மத்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதுச்சேரி ஊரக வளர்ச்சி முகமை சார்பில் பாகூர் தொகுதிக்குட்பட்ட மணப்பட்டு முன்மாதிரி கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த கிராமத்தை புதுச்சேரி எம்.பி. வைத்திலிங்கம் தத்து எடுத்து வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 22 துறைகளை ஒருங்கிணைத்து குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவிற்கு தெற்கு மாவட்ட துணை கலெக்டர் ரிஷிதா குப்தா தலைவராக இருந்து வருகிறார். இவர் மணப்பட்டு கிராமத்தில் தொடர்ச்சியாக ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

மேம்பாட்டு பணிகள்

இந்தநிலையில் மணப்பட்டு கிராமத்தில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகள் தொடர்பாக ஆலோசிக்க கிராம சபை கூட்டத்துக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்க ஊரக வளர்ச்சி துறை, உள்ளாட்சி துறை, பொதுப்பணித்துறை, மின் துறை உள்ளிட்ட 22 துறை அதிகாரிகள் நேற்று மணப்பட்டு அரசு பள்ளிக்கு வந்தனர்.
இது தொடர்பாக தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் கூட்டத்தை முன்னின்று நடத்த வேண்டிய மாவட்ட துணை கலெக்டர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

அதிகாரிகளுடன் வாக்குவாதம்

இதற்கிடையே தகவலறிந்து வந்த மணப்பட்டு கிராம மக்கள், தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு தெரிவிக்காமல் எப்படி கூட்டத்தை நடத்தலாம் என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
ஆனால் அதிகாரிகள் தரப்பில் இருந்து உரிய விளக்கம் அளிக்கப்படாததால், பொதுமக்கள் கூட்டத்தை புறக்கணித்து விட்டு அங்கிருந்து வெளியேறினர். இதனால் கூட்டமும் ரத்தானது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story