கிரிக்கெட் மட்டையில் தொடர்ச்சியாக பந்தை தட்டி மாணவர் உலக சாதனை
ஆற்காடு பள்ளி மாணவர் கிரிக்கெட் மட்டையில் தொடர்ச்சியாக ஒரு நிமிடத்தில் 332 முறை பந்தை தட்டி கின்னஸ் சாதனை படைத்தார்.
ஏற்காடு,
ஏற்காடு மாண்ட்போர்ட் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவரும் மாணவர் விஸ்வநாத், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய பயிற்சியாளர்கள் முன்னிலையில் ஒரு நிமிடத்தில் 332 முறை கிரிக்கெட் மட்டையில் பந்தினைத் தட்டியும், தொடர்ச்சியாக 59 நிமிடங்கள் 47 வினாடிகள் மட்டையின் பக்கவாட்டிலிருந்து பந்தினைத் தட்டியும் உலக சாதனை படைத்துள்ளார்.
ஒரு நிமிடத்தில் கிரிக்கெட் மட்டையில் 283 முறை பந்தினைத் தட்டியதே இதற்கு முன்பான உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது. இப்போது அந்த சாதனையை முறியடித்ததுடன், புதிய சாதனையாக 59 நிமிடங்கள் 47 வினாடிகள் மட்டையின் பக்கவாட்டிலிருந்து பந்தினைத் தட்டியும் உலக சாதனை படைத்துள்ளார்.
இவர் இந்த சாதனையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய முதல்நிலை பயிற்சியாளர் சந்தோஷ்குமார், தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் ஸ்கோரர் வெங்கடேஷ்பாபு ஆகியோர் முன்னிலையில் செய்துகாட்டினார். டைம் கீப்பர்களாக ராஜாகனி, மருது ஆகியோர் செயல்பட்டனர்.
Related Tags :
Next Story