வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி 10-ந் தேதிக்கு மாற்றம் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி 10-ந் தேதி நடைபெற உள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய 4 நகராட்சிகளில் 126 வார்டுகள் மற்றும் ஆலங்காயம், உதயேந்திரம், நாட்டறம்பள்ளி ஆகிய 3 பேரூராட்சிகளில் 45 வார்டுகள் ஆகியவற்றில் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வருகிற 19-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
வாக்குச்சாவடிகளில் பணியமர்த்தப்படும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வருகிற 9-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களால் இரண்டாம் கட்ட பயிற்சி 10-ந் தேதி அன்று நடைப்பெற உள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி 10-ந் தேதி ஏற்கனவே, நடைபெற்ற பயிற்சி மையங்களிலேயே நடைபெறும் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story