கவர்னர் ஒரு ஏஜெண்ட் போல் செயல்படக் கூடாது - கமல்ஹாசன்
கிழக்கு இந்திய கம்பெனியை அனுப்பிவிட்டு, வடக்கு இந்திய கம்பெனி ஆளுவதற்கா குடியரசு பெற்றோம்? என கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார்.
சென்னை,
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தை மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமலஹாசன் தொடங்கினார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈடுபட்டார்.
சென்னையில் உள்ள 123-வது வார்டில் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் மாலாவை ஆதரித்து கமலஹாசன் வீடு வீடாக பரப்புரையில் ஈடுபட்டார். தமிழகம் முழுவதும் மக்கள் நீதி மய்யம் சார்பில் 1338 பேர் தேர்தலில் போட்டியிட உள்ளனர். சென்னையில் மட்டும் 182 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தனித்து போட்டியிட உள்ள மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
விசாலாட்சி தோட்ட பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்பகுதி பெண்கள் சிலர் கமல்ஹாசனுக்கு ஆரத்தி எடுத்தனர். மக்களிடம் டார்ச்லைட் சின்னத்தில் வாக்களிக்குமாறு கமலஹாசன் கோரிக்கையை வைத்தார்.
தொடர்ந்து அவர் பிரச்சாரத்தில் பேசியதாவது:-
கவர்னர், மத்திய அரசின் பேச்சை கேட்டு செயல்படுகிறர். கவர்னர் ஒரு ஏஜெண்ட் போல் செயல்படக் கூடாது. கிழக்கு இந்திய கம்பெனியை அனுப்பிவிட்டு, வடக்கு இந்திய கம்பெனி ஆளுவதற்கா குடியரசு பெற்றோம்?
தலைமைக்கும், பதவிக்கும் கட்சிக்கு வரவில்லை, தமிழ்நாட்டுக்காக வந்துள்ளேன், ஆட்சியை பிடிக்க எல்லோருக்கும் ஆசைதான். முதலில் குடுமியை பிடிக்க வேண்டும். பிறகு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story