அதிமுகவினர் நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கலாம் - எடப்பாடி பழனிசாமி
தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளதால், அதிமுகவினர் நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கலாம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று முதல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சேலத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதாவது:-
தமிழக மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளதால், அதிமுகவினர் நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கலாம். ட் தேர்வை கொண்டு வந்தது திமுகவும், காங்கிரசும்தான், நீட் தேர்வை தடுப்பதுதான் அதிமுக.
திமுக தலைவர் ஸ்டாலின் மக்களிடம் ஆசையைத்தூண்டி ஆட்சிக்கு வந்து விட்டார். கடந்த சட்டமன்ற தேர்தலில் 525 அறிவிப்புகளை வெளியிட்ட திமுக, ஆட்சி பொறுப்பேற்றவுடன் ஒரு அறிவிப்பை கூட நிறைவேற்றவில்லை என்றார்.
Related Tags :
Next Story