அடுத்த 11 நாட்கள் போர்க்களம் போல் இருக்கும்: வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேச்சு
சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய மாநகராட்சிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிமுகம் செய்தார்.
சென்னை,
சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய மாநகராட்சிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மதுரவாயல் அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, லோகநாதன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து அண்ணாமலை பேசியதாவது : பாஜக குறுகிய காலத்தில் அதிக வேகமாக வளர்ந்து வரும் கட்சியாகும், அடுத்த பதினொரு நாட்கள் போர்க்களம் போல் இருக்கும். போர்க்களத்தில் இருப்பது போல் முழு மூச்சாக பணியாற்ற வேண்டும் எனவும் எப்போதும் இல்லாத அளவுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகத்தில் 8 முனை போட்டி ஏற்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளம், செல்போன் மூலம் மக்களிடம் நமது பணியை கொண்டு சேர்க்குமாறும் வேட்பாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
Related Tags :
Next Story