ரூ 2 லட்சம் வரி செலுத்தாத கடைக்கு சீல் பாகூர் கொம்யூன் ஆணையர் நடவடிக்கை


ரூ 2 லட்சம் வரி செலுத்தாத கடைக்கு  சீல்  பாகூர் கொம்யூன் ஆணையர் நடவடிக்கை
x
தினத்தந்தி 6 Feb 2022 8:33 PM IST (Updated: 6 Feb 2022 8:33 PM IST)
t-max-icont-min-icon

ரூ.2 லட்சம் வரி செலுத்தாத கடைக்கு சீல் வைத்து நகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நடவடிக்கை எடுத்தார்.

பாகூர்
ரூ.2 லட்சம் வரி செலுத்தாத கடைக்கு சீல் வைத்து நகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நடவடிக்கை எடுத்தார்.

வரி பாக்கி

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் குடிநீர் கட்டணம், சொத்து வரி, வீட்டு வரியை உடனடியாக செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக வரிவசூல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் பாகூர் கொம்யூன்   பஞ்சாயத்தில் குடிநீர் கட்டணம் ரூ.3 கோடி, சொத்து மற்றும் வீட்டு வரி ரூ.2 கோடி பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.  இதை வசூலிக்க கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர்.

கடைக்கு சீல்

இதையடுத்து வரி பாக்கி வைத்துள்ள வர்த்தக நிறுவனங்கள்    மீது  கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் ஊழியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி பாகூர் அருகே கன்னியகோவிலில் உள்ள வணிக வளாகத்தில் ரூ.2 லட்சம் வரி பாக்கி செலுத்தாமல் இருந்த கடைக்கு சீல் வைத்தனர்.
இந்த நடவடிக்கை தொடரும். எனவே குடிநீர் மற்றும் வீட்டுவரியை பொதுமக்களும், தொழில் நிறுவனங்களும் உடனடியாக செலுத்த வேண்டும் என்று கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்தார்.

Next Story