புதுவை கவர்னர் மாளிகை முன் நள்ளிரவில் பெண் திடீர் போராட்டம்
புதுவை கவர்னர் மாளிகை முன் நள்ளிரவில் பெண் திடீர் போராட்டம்
புதுச்சேரி
புதுவை ராஜ்பவன் தொகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் வீதியில் ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தவர் லட்சுமி. தனியார் வங்கியில் ஊழியராக வேலைபார்த்து வந்தார்.
இவருடன் அவரது மகனும் உடன் இருந்து வந்தார். வீட்டின் உரிமையாளர் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊரான சென்னைக்கு லட்சுமி சென்று இருந்தார்.
பின்னர் அங்கிருந்து மீண்டும் நேற்று புதுவைக்கு திரும்பினார். வீட்டுக்கு சென்று பார்த்தபோது கதவில் அவர் போட்டிருந்த பூட்டுக்கு பதிலாக வேறு ஒரு பூட்டு போடப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுதொடர்பாக பெரியகடை போலீசில் புகார் அளிக்கச் சென்றார். ஆனால் அங்கிருந்த போலீசார் சரியாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து மனமுடைந்த லட்சுமி நள்ளிரவில் கவர்னர் மாளிகைக்கு வந்தார். அங்குள்ள நுழைவாயில் பகுதியில் தடுப்புக்கட்டை அருகே தனது மகனுடன் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் பெரியகடை போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த பெண்ணுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதை ஏற்க மறுத்து அவர் போராட்டத்தை தொடர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story