அனைத்து மதத்தினரையும் பா.ஜ.க. அரவணைத்து செல்லும்; அண்ணாமலை
அனைத்து மதத்தினரையும் அரவணைத்து செல்லும் கட்சி பா.ஜ.க. என அக்கட்சியின் மாநில தலைவா் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய மாநகராட்சிகளில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளா்கள் அறிமுக கூட்டம், வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது, நகா்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. சாா்பில் கிறிஸ்தவா், முஸ்லிம்கள் என பல்வேறு மதங்களை சோந்தவா்களும் வேட்பாளா்களாக நிறுத்தப்பட்டுள்ளனா். அனைத்து மதத்தினரையும் அரவணைத்து செல்லும் கட்சி பா.ஜ.க., ஆனால், தி.மு.க.வில் வாரிசுகளுக்கு மட்டும்தான் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.
தி.மு.க. எட்டு மாதத்தில் சம்பாதித்த கெட்ட பெயரை, எந்த அரசியல் கட்சியும் சம்பாதிக்கவில்லை. மக்கள் மாற்றத்துக்கு தயாராகி விட்டனா். புதியவா்களை வரவேற்க தயாராக இருக்கின்றனா். ஆகவே பா.ஜ.க.வின் வெற்றி உறுதி என்று அவர் பேசியுள்ளார்.
Related Tags :
Next Story