தமிழகத்தில் புற்றுநோயால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு - ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் புற்றுநோயால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை,
மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரொனா நோயாளிகள் பிரிவினை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
முனனதாக செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது,
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது; அதே சமயம் தேனி, கிருஷ்ணகிரி, கோயம்பத்துர் உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் தொற்று சற்று அதிகமாக உள்ளது.
கொரோனா தொற்று படுக்கைகளில் 4 % மட்டுமே நோயாளிகள் உள்ளனர். மே மாதம் இருந்த பதற்றம் இப்போது இல்லை.
மாஸ்க் அணிவது, தனி நபர் இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற நோய் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிப்பதில்லை.
3-ம் அலையில் உயிரிழப்பு குறைந்ததற்கு காரணம், பலர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதும், கட்டுப்பாடுகளை கடைப்பிடித்ததுமே ஆகும்.
தமிழகத்தில் புற்றுநோயால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்களைவிட ஆண்களுக்கு புற்றுநோய் உட்ப்பட அதிகப்படியான நோய் பரவி வருகிறது. ஆகையால் தொற்றா நோய்கள் மீதும் பொதுமக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் 1 கோடியே 6 லட்சம் பேர் இதுவரை இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனர் இது வேதனை அளிக்கிறது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 4.30 லட்சம் பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்புசி போடப்பட்டுள்ளது.
வரும் நாட்களில் பொதுமக்கள் தீவிரத்தை உணர்ந்து கட்டாயம் தடுப்பூசி முழுமையாக செலுத்திக் கொள்ள வேண்டும். இதற்க்கான விழிப்புணர்வு பிரச்சாரம் சுகாதாரத்துறை மூலம் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story