பர்கூர் நடுகற்கள் பாதுகாக்கப்படுமா? அரசுக்கு மலைவாழ் மக்கள் கோரிக்கை


பர்கூர் நடுகற்கள் பாதுகாக்கப்படுமா? அரசுக்கு மலைவாழ் மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 7 Feb 2022 2:10 PM IST (Updated: 7 Feb 2022 2:10 PM IST)
t-max-icont-min-icon

புகழ்பெற்ற மற்றும் பழமையான பர்கூர் மலைப்பகுதி நடுகற்களை அழியாமல் பாதுகாக்க மலைகிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு:

அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப் பகுதி ஏராளமான மூலிகை மரங்களையும் வன விலங்குகளையும் கொண்ட பரந்து விரிந்த மலைப்பகுதி ஆகும். தமிழ்நாடு கர்நாடக எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள இம்மலைப்பகுதியில் 35க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. மேற்கு மலை, கிழக்கு மலை, நடுமலை என பெரிய மலைப் பரப்பைக் கொண்டுள்ளன. 
பல்வேறு சங்ககால இலக்கியங்களில் எடுத்துக்காட்டாக பர்கூர் மலைப் பகுதி அமைந்துள்ளது 

அவற்றில் ஒந்தனை என்ற மலை கிராமத்தில் வாழ்ந்து வந்த மலைவாழ் மக்கள் வனப்பகுதியில் புலிகளுடன் சண்டையிட்டு அவற்றை வெற்றி பெறுவதும் மற்றும் அவர்களின் பக்தியையும் வீரத்தையும் மலைவாழ் மக்களின் பழக்க வழக்கத்தையும் வெளிப்படுத்தக் கூடிய நடுகற்கள் உள்ளன. ஒரே இடத்தில் 15க்கும் மேற்பட்ட நடுகற்கள் அமைந்து உள்ள அவற்றை மலைவாழ் மக்கள் ”யுகாதி பண்டிகை” அன்று சென்று வழிபாடு செய்வார்கள். 

பழமையும் புகழும் பெற்ற சிறப்பு வாய்ந்த இந்த நடுகற்களை பார்த்து செல்வதற்காகவும் மற்றும் வழிபாடு செய்வதற்காக ஏராளமான தமிழ்நாடு கர்நாடகா மாநில மலைவாழ் மக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். குறிப்பாக நடுகற்களில் பக்தியை வெளிப்படுத்த கூடிய நந்தி சிற்பமும் சிவலிங்க சிற்பமும்  மற்றும் வன விலங்குகளை ஆயுதத்தால் கொன்று வெற்றி பெறுவது போன்ற சிற்பங்களும் உள்ளன.

பர்கூர் மலைப்பகுதியில் செம்மை நிற மாடுகள் புகழ்பெற்றதாகும் அவற்றைப் பாதுகாக்க தமிழக அரசு ஆராய்ச்சி நிலையம் அமைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மிகவும் புகழ்பெற்ற பழமையான நடுகற்களை மதில் சுவர்கள் அமைத்து அவை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்


Next Story