பள்ளி மைதானத்தை பாதுகாக்க கோரி கலெக்டர் அலுவலகம் முன் விவசாயி தீக்குளிக்க முயற்சி
திருப்புவனம் அருகே பள்ளி மைதானத்தை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு.
சிவகங்கை
திருப்புவனம் பாப்பாங்குளம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கூட மைதானத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாக அதே பகுதியை சேர்ந்த விவசாயி கண்ணன் என்பவர் பல முறை புகார் அளித்தும் வருவாய்த்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
இதனால் மனம் உடைந்த கண்ணன் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முன்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், விரைந்து வந்து அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கா அனுப்பி வைத்தனர்.
கலெக்டர் அலுவலகம் முன் விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story