பிரபல ரவுடி தினேஷ் சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண்


பிரபல ரவுடி தினேஷ் சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 7 Feb 2022 9:10 PM IST (Updated: 7 Feb 2022 9:10 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சிபுரத்தில் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட ரவுடி தினேஷ் சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்ததை அடுத்து வரும் 28ந் தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரபல ரவுடி மறைந்த ஸ்ரீதரின் கூட்டாளியான ரவுடி தினேஷ் மீது 7 கொலை, 20 கொலை முயற்சி  வழக்குகள் உள்பட 38 வழக்குகளில் சம்பந்தப்பட்டு 4 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார். இந்த நிலையில் சிவகாஞ்சி போலீசில் கொலை முயற்சி உள்பட 6 பிரிவுகளில் ரவுடி தினேஷ் மீது வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர்,

இதை அறிந்த ரவுடி தினேஷ் தலைமறைவாக இருந்த நிலையில் சைதாப்பேட்டை பெருநகர 9வது குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து வருகிற 28ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இந்த நிலையில் ரவுடி தினேஷை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தலைமையிலான போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக  தெரிவித்தனர்.


Next Story