3 ஆயிரம் பேருக்கு தொடர் சிகிச்சை
கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலியாகி உள்ள நிலையில் 3 ஆயிரம் பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலியாகி உள்ள நிலையில் 3 ஆயிரம் பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
190 பேருக்கு தொற்று
புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 1,160 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 190 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது ஆஸ்பத்திரிகளில் 91 பேர், வீடுகளில் 3 ஆயிரத்து 598 பேர் என 3 ஆயிரத்து 689 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். 651 பேர் குண மடைந்தனர்.
2 முதியவர்கள் பலி
அதே நேரத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர். அதாவது ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த ஜெகராஜ் நகரை சேர்ந்த 60 வயது முதியவரும், ஏனாமில் 75 வயது மூதாட்டியும் பலியாகி உள்ளனர். இதன் மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 1,950 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் தொற்று பரவல் 16.52 சதவீதமாகவும், குணமடைவது 96.57 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முதல் தவணை தடுப்பூசியை 95 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 152 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 48 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 15 லட்சத்து 43 ஆயிரத்து 584 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
Related Tags :
Next Story