நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க பெண் வேட்பாளருக்கு ‘வைரம்’ சின்னம்
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க பெண் வேட்பாளருக்கு ‘வைரம்’ சின்னம் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டது.
சென்னை,
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம், ஊரக உள்ளாட்சி தேர்தலை போன்று நகர்ப்புற தேர்தலிலும் களம் இறங்கி உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலில் கோடம்பாக்கம் மண்டலத்துக்குட்பட்ட 136-வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் முன்னாள் கவுன்சிலர் ஸ்டார் குணசேகரனின் மனைவி அறிவுச்செல்வி போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் ‘ஆட்டோ’ சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற விஜய் மக்கள் இயக்கத்தின் கோரிக்கையை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இதையடுத்து நடிகர் விஜய், ‘நீங்கள் எந்த சின்னத்தில் போட்டியிட விரும்புகிறீர்களோ? அந்த சின்னத்தில் போட்டியிடலாம்’ என்று வேட்பாளர்களுக்கு அனுமதி வழங்கினார். இந்த நிலையில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு சுயேச்சைகளுக்கு சின்னம் ஒதுக்கும் பணி அந்தந்த மண்டல அலுவலகங்களில் நேற்று மாலையில் நடைபெற்றது. இதில் விஜய் மக்கள் இயக்கத்துக்கு எந்தெந்த வார்டில் என்னென்ன சின்னம் கிடைக்கப்போகிறது? என்பதை அவருடைய ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். இந்தநிலையில் சென்னையில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் அறிவுச்செல்விக்கு ‘வைரம்’ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இன்னொரு சுயேச்சை வேட்பாளரும் ‘வைரம்’ சின்னம் வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார். இதையடுத்து குலுக்கல் முறை கையாளப்பட்டது. இதில் அறிவுச்செல்விக்கு ‘வைரம்’ சின்னம் கிடைத்தது.

Related Tags :
Next Story