கடம்பூர் பேரூராட்சி தேர்தல் ரத்து: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!


கடம்பூர் பேரூராட்சி தேர்தல் ரத்து: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
x
தினத்தந்தி 8 Feb 2022 8:51 AM IST (Updated: 8 Feb 2022 8:51 AM IST)
t-max-icont-min-icon

கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி தேர்தலில் விதிமீறல் நடந்துள்ளாதால் தேர்தலை ரத்து செய்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி,

தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளையும், தேர்தல் விதிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி தேர்தலை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தினால் கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி அனைத்து வார்டுகளுக்கான தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும்படி, தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டருக்கு ஆணையிடப்பட்டு இருக்கிறது. 

ரத்து செய்யப்பட்ட கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Next Story