கத்தியைக் காட்டி மிரட்டி வாக்கு கேட்ட சுயேச்சை வேட்பாளரின் கணவர் கைது
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தனது மனைவிக்கு வாக்களிக்குமாறு கத்தியைக் காட்டி மிரட்டி வாக்கு கேட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் பூபாலன்(42), இவர் காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீபெரும்புதூர் நகர எஸ்.சி. எஸ். டி துணை தலைவராக இருந்தார். ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 1வது வார்டில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தனது மனைவி தனலட்சுமிக்கு வாய்ப்பு வழங்குமாறு காங்கிரஸ் மேலிடத்தில் விருப்பமனு அளித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவருக்கு தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் பூபாலன் அவரது மனைவி தனலட்சுமியை சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் பூபாலன் 1 வார்டில் உள்ள பொதுமக்களிடம் தனது மனைவிக்கு ஓட்டுப்போடுமாறு கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார்.
அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட ஸ்ரீபெரும்புதூர் போலீசார் பூபாலனை கையும் களவுமாக பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Related Tags :
Next Story