ரெட்ராக் பகுதியில் செல்பி எடுக்க முயன்ற வாலிபர் உடல் அழுகிய நிலையில் மீட்பு
கொடைக்கானல் ரெட்ராக் பகுதியில் செல்பி எடுக்க முயன்று மாயமான வாலிபரை தேடி வந்த நிலையில் அழுகிய நிலையில் அவரது உடல் கண்டறியப்பட்டது.
கொடைக்கானல்,
கொடைக்கானல் வட்டக்கானல் பகுதி அருகே வனத்துறையினரால் தடை செய்யப்பட்ட ரெட்ராக் பகுதிக்கு மதுரையை சேர்ந்த ராம்குமார்(32) என்ற இளைஞர் கடந்த 2ஆம் தேதி பாறையின் நுனி பகுதியில் செல்பி எடுக்க முயன்ற போது தவறி பள்ளத்தாக்கு பகுதியில் விழுந்து மாயமானதாக உடன் வந்த நண்பர்களால் தெரியவந்தது. இதனையடுத்து தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள், மலையேற்ற குழுவினர் என சுமார் 30 க்கும் மேற்பட்டோர் ட்ரோன் கேமரா உதவியுடன் தேடி வந்த நிலையில் சுமார் 1500 அடி பள்ளத்தில் இளைஞர் சம்பவத்தன்று அணிந்திருந்த சட்டை மட்டும் கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சட்டை கிடக்கும் பள்ளத்தாக்கு பகுதியில் சென்று பார்த்தபோது பாறையின் இடுக்கு பகுதியில் அழுகிய நிலையில் இளைஞரின் சடலத்தை கண்டறிந்துள்ளனர், இதனையடுத்து இன்று உடல் மீட்க்கப்படும் என வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story