மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட காளை உயிரிழப்பு
கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துக்கொண்ட காளை உடல்நிலை குறைவால் உயிரிழந்தது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்களாப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால். இவர் காரி என்ற ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து பரமரித்து வந்தார். மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றது மட்டுமல்லாமல் இந்த காளை வடமாடு மஞ்சுவிரட்டுக்கு செல்லும் போது ஊரில் உள்ள இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் ஆரத்தி எடுத்தும் வணங்கியும் வழி அனுப்பி வைப்பர்.
இந்நிலையில் ஜெயபால் வளர்த்து வந்த காரி என்று பெயரிடப்பட்ட ஜல்லிக்கட்டு காளை உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தது. தகவல் அறிந்த அனைவரும் மனிதன் இறப்புக்கு வருவது போல பூ மாலை, வேட்டி, துண்டு என கொண்டு வந்து கோடி எடுத்து, மாட்டிற்கு மஞ்சள் தடவிய வேட்டியை போத்தினர். பெண்களும், இளைஞர்களும் கதறி அழுதனர். பின்னர் ஜெயபாலுக்கு சொந்தமான தோட்டத்தில் காளையை அடக்கம் செய்தனர். இதனால் அந்த பகுதியே சோகமாக காணப்பட்டது .
Related Tags :
Next Story