சிறப்பு சட்டசபை கூட்டம்: பா.ஜ.க. வெளிநடப்பு...!
நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதாவின் மீது பேச வாய்ப்பளிக்க வில்லை எனக்கூறி பாஜக வெளிநடப்பு செய்தது.
சென்னை,
நீட் தேர்வில் விலக்கு கோரி சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டதை கவர்னர் ஆர்.என். ரவி அரசுக்கே திருப்பி அனுப்பினார்.
மசோதா திருப்பி அனுப்பியதை தொடர்ந்து பிப்ரவரி 5-ஆம் தேதி சட்டமன்ற அனைத்துகட்சி கூட்டம் நடைபெற்றது. அனைத்துக்கட்சி கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
நீட் தேர்வு விலக்கு மசோதாவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார்.
பாஜக சட்டப் பேரவைக்குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கூறும் போது ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையை கவர்னர் அவமானப்படுத்துவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியிருந்தார். ஆளுநருக்கு அப்படியான நோக்கம் ஏதும் இல்லை என கூறினார். தொடர்ந்து பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
Related Tags :
Next Story