தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் நேர மாற்றத்தை கண்டித்து விவசாயிகள் நூதன முறையில் போராட்டம்
திருவண்ணாமலையில் தேசிய ஊரக வேலைக்கு செல்லும் பெண்களின் வேலை நேரம் மாற்றப்பட்டதால் விவசாயிகள் கலெக்டர் அலுவலம் முன்பு நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை,
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் பெண்கள் காலை 9.30 மணிக்கு வேலைக்கு சென்று வந்த நிலையில் தற்போது காலை 7.30 மணிக்கு வேலைக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் தங்கள் வீட்டு வேலைகளை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்று கூறி இந்த நேர மாற்றத்துக்கு கண்டனம் தெரிவித்து திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு என் .எம். ஆர். உழவர் பேரவை சார்பில் நூதன போராட்டம் நடத்தது. இதில் மாவட்ட தலைவர் புருஷோத்தமன் தலைமையில் பங்கேற்ற விவசாயிகள் விவசாய கருவிகளை கயிற்றில் கட்டி இழுத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதுபற்றி அவர்கள் கூறும் போது, தேசிய வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகள் 9:30 மணிக்கு பணிக்குச் சென்று வந்த நிலையில் தற்போது 7.30 மணிக்கு வேலைக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் தங்கள் வீட்டு வேலைகளை காலை 7 மணிக்குள் முடித்துவிட்டு 7.30 மணிக்கு வேலைக்கு செல்கின்றனர். மேலும் 100 நாள் வேலை திட்டம் காரணமாக விவசாய வேலைகளுக்கு பெண்களை அழைக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்படுகிறது.
எனவே 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு பழைய நடைமுறைப்படி தினசரி காலை9.30 மணிக்கு வேலைக்கு வர உத்தரவிட வேண்டும். அதன்மூலம் விவசாய குடும்பத்தினர் பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story