வாந்தி வருவதால் பேருந்தின் படிக்கட்டு ஓரம் பயணித்த இளம்பெண்; தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு
கடலூர் அருகே வாந்தி வருவதால் பேருந்தின் படிக்கட்டு ஓரம் பயணித்த இளம்பெண் தவறிவிழுந்து உயிரிழந்தார்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தாலுக்கா கீரனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணனின் மகள் அபிபாரதி (19). இவர் நேற்று மாலை சிதம்பரத்திலிருந்து கீரனூருக்கு தனியார் பஸ்சில் செல்லும் போது வாந்தி வருவதாக படிக்கட்டு ஓரம் வந்து நின்று பயணித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பஸ்ஸில் இருந்து கீழே விழுந்த அபிபாரதி பலத்த காயம் அடைந்தார்.
உடனே அருகில் உள்ள சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அபிபாரதி உயிரிழந்தார். இது சம்பந்தமாக புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி வழக்கு பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Related Tags :
Next Story