சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா கவர்னர் மாளிகையில் ஒப்படைப்பு
"நீட் விலக்கு மசோதா தமிழக கவர்னருக்கு அனுப்பப்பட்டது" என தமிழக சட்டப்பேரவை செயலர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நீட் தேர்வில் விலக்கு கோரி சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டதை கவர்னர் ஆர்.என். ரவி அரசுக்கே திருப்பி அனுப்பினார்.
மசோதா திருப்பி அனுப்பியதை தொடர்ந்து பிப்ரவரி 5-ஆம் தேதி சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அனைத்துக்கட்சி கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா கவர்னர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டது. கவர்னரால் நிராகரிக்கப்பட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு கவர்னரிடம் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
Related Tags :
Next Story