விழுப்புரம் அருகே சோகம்: ஆழ்துளை கிணற்று பள்ளத்தில் விழுந்த 2 சிறுவர்கள் பலி...!


விழுப்புரம் அருகே சோகம்: ஆழ்துளை கிணற்று பள்ளத்தில் விழுந்த 2 சிறுவர்கள் பலி...!
x
தினத்தந்தி 8 Feb 2022 7:35 PM IST (Updated: 8 Feb 2022 7:35 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே ஆழ்துளை கிணற்று பள்ளத்தில் விழுந்த 2 சிறுவர்கள் பலியாகினர்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பெரம்பை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (கொத்தனார்) இணித்தா தம்பதிகள் இருவருக்கும் திருமணம் ஆகி 6 வருடம் ஆகிறது இவர்களுக்கு லோகித் வயது 3 லெவின் வயது 5 ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில்  வீட்டு அருகில் உள்ள இடத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர் அப்போது ஆழ்துளை கிணறுக்க அருகில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக பலியாகினர். தகவலறிந்து வந்த ஆரோவில் போலீசார் சிறுவர்கள் உடலை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

ஆழ்துளை கிணற்று பள்ளத்தில் விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story