தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களில் மது விற்க தடை


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களில் மது விற்க தடை
x
தினத்தந்தி 8 Feb 2022 8:31 PM IST (Updated: 8 Feb 2022 8:31 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் ,மது விற்க தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

சென்னை ,

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19-ம் தேதி நடக்க இருக்கிறது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 30 தொடங்கிய நிலையில், பிப்ரவரி 4 ஆம் தேதி நிறைவடைந்தது. 

இந்நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில், பிப்ரவரி 17 முதல் 19ம் தேதி வரையும் ,பிப்ரவரி 22ம் தேதியும் மது விற்க தடை விதித்து ,மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

Next Story