கஞ்சா, வெடிகுண்டு பதுக்கல் பாழடைந்த கட்டிடங்களில் போலீசார் சோதனை


கஞ்சா, வெடிகுண்டு பதுக்கல் பாழடைந்த கட்டிடங்களில் போலீசார் சோதனை
x
தினத்தந்தி 9 Feb 2022 12:16 AM IST (Updated: 9 Feb 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் பாழடைந்த கட்டிடங்களில் கஞ்சா, வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என போலீசார் சோதனை நடத்தினார்கள்.

புதுச்சேரி
புதுவையில் பாழடைந்த கட்டிடங்களில் கஞ்சா, வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என போலீசார் சோதனை நடத்தினார்கள்.

கஞ்சா விற்பனை

புதுவையில் கஞ்சா விற்பனை கொடிகட்டி பறக்கிறது. சுற்றுலா பயணிகளை குறி வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக கூறப்படுகிறது. இதற்காக வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சாவை  பாழடைந்த கட்டிடங்களில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.
மேலும் சமூக விரோத செயல்களும் அரங்கேறி வருவதாக   கூறப்படுகிறது. புதுச்சேரியில் சமீப காலமாக மோதல் போக்கு அதிகரித்து வருவதால் எதிரிகளை தீர்த்து கட்ட வெடிகுண்டுகளும் பாழடைந்த வீடுகளில் பதுக்கி வைத்திருக்கலாம் என்று    போலீசார் கருதினர். 

வெடிகுண்டு பதுக்கல்?

இந்தநிலையில் பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் முக்கிய வீதிகளில் உள்ள பாழடைந்த மற்றும் ஆட்கள் வசிக்காத வீடுகளில் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள். 
அப்போது அந்த கட்டிடங்களில் கஞ்சா, வெடிகுண்டு ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை நடத்தினர். மேலும் சமூக விரோதிகளின் நடமாட்டம் குறித்து விசாரித்தனர். இதுபோன்று தொடர் சோதனையில் ஈடுபட போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Next Story