விவசாயி வீட்டில் நகை திருட்டு
பழவூர் அருகே விவசாயி வீட்டில் 3 கிராம் நகையை மர்மநபர் திருடி சென்று விட்டார்.
வடக்கன்குளம்:
பழவூர் அருகே தெற்கு கருங்குளத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 42). விவசாயி. இவர் நேற்று காலை தோட்டத்துக்கு சென்று விட்டார். அவரது மனைவி நாகர்கோவிலுக்கு சென்று இருந்தார். இந்த நிலையில் மர்மநபர் அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவை உடைத்து அதில் இருந்த சுமார் 3 கிராம் மோதிரத்தை திருடி சென்றார். அருண்குமார் மாலையில் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகை திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story