சித்தூர் பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்க உடனடி உத்தரவு ‘மின்னல் வேகம்’ அல்ல, இனி ‘மு.க.ஸ்டாலின் வேகம்’
சித்தூர் பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்க உடனடி உத்தரவு ‘மின்னல் வேகம்’ அல்ல, இனி ‘மு.க.ஸ்டாலின் வேகம்’ நகரி தொகுதி எம்.எல்.ஏ. ரோஜா புகழாரம்.
சென்னை,
சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ. ரோஜா நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது அவர், ‘சித்தூர் மாவட்டத்தில் வசிக்கின்ற தமிழர்கள் குழந்தைகளின் தமிழ் மொழி பாடத்திட்டத்துக்காக 10 ஆயிரம் புத்தகங்கள் இலவசமாக வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்றி உள்ளார்.
மு.க.ஸ்டாலினின் மின்னல் வேக நடவடிக்கையால் ரோஜா வியந்து போனார். இதையடுத்து அவர், மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார். அதில் ரோஜா கூறி இருப்பதாவது:-
“உங்களை (மு.க.ஸ்டாலின்) நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துவிட்டு, நாங்கள் நகரி வந்து சேர்வதற்குள், தங்களது அரசு உத்தரவு என்னுடைய அலுவலகத்துக்கு வந்து சேர்ந்துவிட்டது. மின்னல் வேகம் என்பார்கள், ஆனால் அதைவிட வேகமாக தங்கள் உத்தரவு எங்களுக்கு வந்து அடைந்ததை கண்டு நாங்கள் வியந்து போனோம். இனி ஸ்டாலின் வேகம் என்றே குறிப்பிடலாம் என்று சந்தோஷத்தில் பாராட்ட தோன்றுகிறது.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story