‘நீட்' தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியது சரியான முடிவு அல்ல
‘நீட்' தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியது அரசியல் சட்ட அமைப்பின்படி சரியான முடிவு அல்ல என்று சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.
சென்னை,
‘நீட்' தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்குகோரும் மசோதாவை சட்டசபையில் நேற்று மீண்டும் தாக்கல் செய்து, மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
2006-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பல் மற்றும் மருத்துவ கல்வி உள்பட அனைத்து தொழிற்கல்வி சேர்க்கையிலும் பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்வதற்காக, பொதுமக்களின் கருத்து மற்றும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களின் மாணவர்களால் இதற்கென தனிப்பயிற்சி பெறமுடியாத சூழல் மற்றும் பிளஸ்-2 தேர்வுடன் போட்டிதேர்வுகளும் நடைமுறையில் இருக்கும்போது ஏற்படும் மனஅழுத்தம் போன்ற பல்வேறு கோணங்களில் எம்.அனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
அதன் பரிந்துரை பெற்றபின், இதற்கென ஒரு சட்டமுன்வடிவு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்று, சட்டம் இயற்றப்பட்டது என்பதை அனைவரும் அறிந்ததே. அதனடிப்படையில், பிளஸ்-2 மதிப்பெண்களின் அடிப்படையில், நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டைப் பின்பற்றி, மருத்துவ கல்வி சேர்க்கையில் மாநில அரசின் இடங்களுக்கு பிரச்சினையின்றி மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றுவந்தது.
தொடர்ந்து எதிர்ப்பு
ஆகையால், ‘நீட்' முறை அறிவிப்பதற்கு முன்பே, பொது நுழைவுத்தேர்வை தமிழ்நாடு நன்கு ஆராய்ந்து நீக்கி, ஒளிவு மறைவற்ற ரீதியில் மாணவர் சேர்க்கையை நடத்தி வந்தநிலையில் தான், மாநில அரசின் மருத்துவ இடங்களுக்கு அறிமுகப்படுத்திய ‘நீட்' முறையை, தமிழ்நாடு, அறிமுக காலத்தில் இருந்தே அதிகாரபூர்வமாகவும், சட்டரீதியாகவும் மற்றும் சட்டமன்றத்தில் சட்டமுன்வடிவை நிறைவேற்றியும், கொள்கை ரீதியாகவும் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
மருத்துவ கல்வி சேர்க்கைக்கான போட்டித் தேர்வுகளுக்காக எடுக்கப்படும் வகுப்புகள் மூலம் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு போட்டித்தேர்வு எதிர்மாறாக மற்றும் சிரமமானதாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினரும் ‘நீட் தேர்வு’ முறையை எதிர்க்கின்றனர்.
ஒட்டுமொத்த உணர்வு
தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த உணர்வை மீறியும், 2017-ம் ஆண்டுக்கு பிறகு, மருத்துவம் மற்றும் பல் மருத்துவ சேர்க்கை ‘நீட்' அடிப்படையில்தான் நடைபெற்றுவருகிறது. இதில் இருந்து முறையாக விலக்குபெற, ஏற்கனவே 2017-ல் இயற்றிய சட்டத்திற்கு ஜனாதிபதியால் ஒப்புதல் நிறுத்திவைத்த நிலையில், இந்த அரசு பொறுப்பேற்றவுடன் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்மட்டக்குழு இதுகுறித்து ஆராய்ந்து, விரிவாக அறிக்கைபெற்று, அதன்பின்பு தான் இந்த புதிய சட்டமுன்வடிவு 13-9-2021-ல் ஒருமனதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்டதை நாம் எல்லோரும் நன்கு அறிவோம்.
இதற்கான விரிவான காரணங்கள் மற்றும் விளக்கங்கள் தெளிவாக இந்த சட்டமுன்வடிவினை ஏற்கனவே முன்மொழியும்போது எடுத்துரைத்துள்ளேன். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உணர்வினை பிரதிபலிப்பதாக உள்ள இந்த சட்டமுன்வடிவை, கவர்னர் அரசியல் சட்ட அமைப்பின்படி, ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்புவதற்கு, கவர்னருக்கு 18-9-2021 அன்று அனுப்பப்பட்டது.
உயர்மட்ட குழுவின் அறிக்கை
அதன்பிறகு, முதல்-அமைச்சர், கவர்னரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். 8-1-2022 அன்று நடந்த அனைத்து சட்டமன்ற கட்சி கூட்டத்தின் வாயிலாகவும் இதேகருத்து வலியுறுத்தப்பட்டது. இருப்பினும், 142 நாட்களுக்கு பிறகு, சில காரணங்களைச் சுட்டிக்காட்டி மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்களின் மறுபரிசீலனைக்கு கவர்னர், சபாநாயகருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.
கவர்னர் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 200-ன்படி சட்டமுன்வடிவை ஜனாதிபதிக்கு அனுப்பி, ஜனாதிபதிக்கு சட்டமுன்வடிவு குறித்த சந்தேகங்கள் அல்லது விளக்கங்கள் தேவைப்பட்டால், மீண்டும் கவர்னர் மூலம் இந்த சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டுமே தவிர, தன்னிச்சையாக கவர்னர் சம்பந்தப்பட்ட சட்டமுன்வடிவை திருப்பி அனுப்பியுள்ளது, அரசியல் சட்ட அமைப்பின்படி சரியான முடிவு அல்ல. ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் அறிக்கைதான் இந்த சட்டமுன்வடிவிற்கு அடிப்படை என்று கவர்னர் கூறியுள்ளார்.
யூகங்கள் என்பதா?
கவர்னர் கூறியவாறு, ஏதோ அறிக்கையின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டம் என்பது முற்றிலும் தவறான கருத்து. நீதிபதி தலைமையிலான உயர்மட்ட குழுவின் அறிக்கை யூகங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், ‘நீட்' நோக்கமற்றது, ‘நீட்' தேர்வு தகுதிக்கு எதிரானது என்றும், ‘நீட்' தேர்வினால் திறன் குறைவான, சமுதாயத்தில் முன்னேறிய பணம் படைத்த மாணவர்கள், மருத்துவத்துறையில் இடம்பெறுவர் என்றும் மற்றும் மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் தேர்வு அளவிற்கு ‘நீட்' தேர்வுமுறை திறனை வளர்ப்பதில்லை போன்ற கருத்துகளை யூகங்கள் என்று கவர்னர் குறிப்பிட்டுள்ளார்.
இவைகள் அனைத்தும் முற்றிலும் தவறான கருத்தாகும். கவர்னரின் கருத்து இந்த உயர்மட்ட குழுவினை அவமானப்படுத்துவதுபோல் உள்ளது. நடைமுறையில் உள்ள உண்மைநிலையை கவனித்தால், பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்ற மற்றும் அதற்கான வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே ‘நீட்' தேர்வு எழுதுவது மற்றும் தேர்ச்சி பெறுவது எளிதாக அமைந்துள்ளது.
அரசியல் அமைப்புபடி சரியானது அல்ல
சமூகத்திலுள்ள இதர பிரிவு மாணவர்கள் குறிப்பாக, கிராமப்புற அரசு மற்றும் இதரவகை பள்ளிகளில் பயிலும் பட்டியலின மற்றும் பழங்குடியின மற்றும் இதர நலிவுற்ற பிரிவினருக்கு இவ்வகை பயிற்சி எட்டாக் கனியாகவே உள்ளது. அதுமட்டுமன்றி, ஒன்றுக்கு மேற்பட்ட முறை நுழைவுத்தேர்வு எழுதி, மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களுக்கு சேரும் வாய்ப்பு உள்ளதால், அந்தாண்டு 12-வது படிக்கும் மாணவர்களுக்கு மாறாக பன்முறை எழுத வசதியுள்ள மாணவர்களுக்கு சாதகமாக ‘நீட்' அமைந்துள்ளது. கவர்னரின் கருத்து- இயற்பியல் மற்றும் உயிரியல் தேர்வில் திறன் பற்றி கூறாமல் அனைத்துவகை பொது அறிவு குறித்து வரையறுக்கப்படாத கருத்துகள் கூறப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டமுன்வடிவை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்புவதற்கு பதிலாக கவர்னர் நீதிபதியின் குழுவின் அறிக்கையில் உள்ள கருத்துகள் பற்றி தனது கருத்துகளை சுட்டிகாட்டுவது அரசியல் அமைப்பின்படி சரியானது அல்ல.
தவறான கருத்து
உயர்மட்ட குழுவின் அறிக்கை ஒருதலைபட்சமானது என்று கவர்னர் கூறியுள்ளார். உயர்மட்ட குழுவின் அறிக்கை ஒருதலைப்பட்சமான முடிவினை அளித்துள்ளது என்பது முற்றிலும் தவறான கருத்து ஆகும். புள்ளிவிவரங்களை ஆய்வு செய்தது மட்டுமன்றி, குழு பொதுமக்களிடம் விரிவாக கருத்துகேட்டு, அதனை வல்லுனர்களுடன் ஆராய்ந்து அறிக்கை அளித்துள்ளது. சட்டமன்றத்தில் இருந்த அனைத்து கட்சிகளும் ‘நீட்' தேர்வுமுறைக்கு எதிரான சட்டமுன்வடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளன.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி மாநிலங்களுக்கு இதுபோன்ற சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது. எனவே, இச்சட்டமுன்வடிவினை சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றிட அனைத்து உறுப்பினர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story