ரோந்து பணியில் இருந்த காவலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி


ரோந்து பணியில் இருந்த காவலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலி
x
தினத்தந்தி 9 Feb 2022 9:22 AM IST (Updated: 9 Feb 2022 9:22 AM IST)
t-max-icont-min-icon

சென்னை குன்றத்தூர் அருகே ரோந்து பணியில் இருந்த காவலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை,

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ் நாராயணன் குன்றத்தூர் காவல் நிலைய குற்றப்பிரிவில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வருகிறார்.  இவர் ரோந்து பைக்கில் ஸ்ரீபெரும்புதூர் சாலையில் குன்றத்தூர் நோக்கிச் சென்றபோது, சிறுகளத்தூர் அருகே அதிகாலை 2 மணியளவில் அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்த போது, நாராயணன் ஏற்கனவே இறந்துவிட்டதால் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story