நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு வரும் 19 ஆம் தேதி பொதுவிடுமுறை
தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள கடம்பூர் பேரூராட்சிக்கு பொது விடுமுறை பொருந்தாது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 1,374 மாநகராட்சி கவுன்சிலர், 3,843 நகராட்சி கவுன்சிலர், 7,621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,838 பதவி இடங்களுக்கு இந்த தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கும், அ.தி.மு.க. கூட்டணிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.மேலும் பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வரும் 19 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள கடம்பூர் பேரூராட்சிக்கு பொது விடுமுறை பொருந்தாது.
Related Tags :
Next Story