முழு சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி
அத்தியூர் ஊராட்சியில் முழு சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியம் அத்தியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டவிளாகம் கிராமத்தில் முழு சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஆதிநாயகி பாஸ்கரன் தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயசித்ரா, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் பிருந்தா, தூய்மை பாரத இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஆதிலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் வீரமணி வரவேற்று பேசினார். முழு சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சியை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) அருள்மொழி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், சீர்காழி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 37 ஊராட்சிகளில் அத்தியூர் ஊராட்சி தூய்மை பாரத இயக்கம் சார்பில் முன்மாதிரி ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் ஊராட்சியை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
தினமும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்போதுதான் இந்த ஊராட்சி சுகாதாரத்தில் முன்மாதிரி ஊராட்சியாக திகழும் என்றார். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தி.மு.க. கிளை செயலாளர் பாஸ்கரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பணித்தள பொறுப்பாளர்கள், மகளிர் சுயஉதவி குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஊராட்சி முழுவதும் தூய்மை பணியாளர்களை கொண்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
Related Tags :
Next Story